/உள்ளூர் செய்திகள்/தேனி/காடுகளின் பரப்பளவை அதிகரிக்க பாடுபாடுங்கள்காடுகளின் பரப்பளவை அதிகரிக்க பாடுபாடுங்கள்
காடுகளின் பரப்பளவை அதிகரிக்க பாடுபாடுங்கள்
காடுகளின் பரப்பளவை அதிகரிக்க பாடுபாடுங்கள்
காடுகளின் பரப்பளவை அதிகரிக்க பாடுபாடுங்கள்
ADDED : செப் 09, 2011 11:27 PM
உத்தமபாளையம் : இந்தியாவில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் 'பருவநிலை மாற்றத்தால் காடுகளின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி தாளாளர் தர்வேஸ் மைதீன் தலைமை வகித்தார். மேலாண்மை குழு தலைவர் சேக்மைதீன் முன்னிலை வகித்தார். முதல்வர் கௌது மைதீன் துவக்கி வைத்தார்.பேராசிரியர் செல்வராஜ் ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க துணை தலைவர் மோகனா பேசுகையில், 'வனவள மேம்பாட்டு ஆணையம் காடுகளின் பரப்பளவு 750 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இதுகுறைவாகும். காடுகளின் பரப்பளவை அதிகரிக்க மக்கள் அனைவரும் பாடுபட வேண்டும். மரம் நடுதலை முக்கிய கடமையாக செய்ய வேண்டும்,'என்றார்.கருத்தரங்கின் தலைப்பை விளக்கும் வகையில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் ஜெயபாலன், முகமது கவுஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். பேராசிரியர் முகமது மீரான் நன்றி கூறினார்.


