/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் 15ம்தேதி மாணவ, மாணவிகளுக்கு அண்ணாத்துரை பிறந்தநாள் சைக்கிள் போட்டிநெல்லையில் 15ம்தேதி மாணவ, மாணவிகளுக்கு அண்ணாத்துரை பிறந்தநாள் சைக்கிள் போட்டி
நெல்லையில் 15ம்தேதி மாணவ, மாணவிகளுக்கு அண்ணாத்துரை பிறந்தநாள் சைக்கிள் போட்டி
நெல்லையில் 15ம்தேதி மாணவ, மாணவிகளுக்கு அண்ணாத்துரை பிறந்தநாள் சைக்கிள் போட்டி
நெல்லையில் 15ம்தேதி மாணவ, மாணவிகளுக்கு அண்ணாத்துரை பிறந்தநாள் சைக்கிள் போட்டி
திருநெல்வேலி : நெல்லையில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாளையொட்டி 15ம்தேதி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டிகள் நடக்கிறது.
மாணவிகள் : 13 வயதுக்குட்பட்டவர்கள் பாளை. அண்ணா விளையாட்டு அரங்கில் துவங்கி டி.ஐ.ஜி., பங்களா வழியே திருச்செந்தூர் ரோட்டில் 5 கி.மீ., மொத்தம் 10 கி.மீ., தூரம், 15 வயதுக்குட்பட்டவர்கள் அதே வழித்தடத்தில் திருச்செந்தூர் ரோட்டில் 7.5 கி.மீ., மொத்தம் 15 கி.மீ., தூரம், 17 வயதுக்குட்பட்டவர்கள் அதே வழித்தடத்தில் திருச்செந்தூர் ரோட்டில் 7.5 கி.மீ., மொத்தம் 15 கி.மீ., சென்று வரவேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசு, முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விரும்புபவர்கள் பள்ளித்தலைமையாசிரியரிடம் வயதுசான்றிதழ் பெற்றுவர வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிளை பயன்படுத்தக்கூடாது. போட்டியில் பங்கேற்பவர்கள் 15ம்தேதி காலை 6 மணிக்கு பாளை. அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வரவேண்டும். இத்தகவலை கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.


