போலிச்சான்றிதழ்: மேலும் ஒரு பைலட் கைது
போலிச்சான்றிதழ்: மேலும் ஒரு பைலட் கைது
போலிச்சான்றிதழ்: மேலும் ஒரு பைலட் கைது
ADDED : செப் 04, 2011 09:01 AM
புதுடில்லி: போலி சான்றிதழ் கொடுத்து விமான பைலட் லைசென்ஸ் பெற்றதாக மேலும் ஒரு பைலட் கைது செய்யப்பட்டார்.
மும்பை மேற்குபகுதி அந்தேரியைச் சேர்ந்தவர் தீபக்தவுதல்அஸ்தாக் (25) இவர்கடந்த 2009-ம் ஆண்டு விமான பைலட் லைசென்ஸ் பெற போலி மதி்ப்பெண் சான்றிதழ் அளித்ததாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலி்ன்படி போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையறித்த தீபக் தலைமறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து 6மாதங்களுக்குப்பி்ன்னர் நேற்று தீபக் மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கினார். போலி சான்றிதழ் மூலம் பைலட் லைசென்ஸ் பெற்றதாக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது


