/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் இளம் கலைஞர் அசத்தல்குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் இளம் கலைஞர் அசத்தல்
குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் இளம் கலைஞர் அசத்தல்
குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் இளம் கலைஞர் அசத்தல்
குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் இளம் கலைஞர் அசத்தல்
ADDED : அக் 05, 2011 10:38 PM
குன்னூர் : குன்னூரில் நடந்த இளம் கலைஞரின் திறமையில் பார்வையாளர்கள் வியந்தனர்.
நீலகிரி கலாச்சார சங்கத்தின் 127வது நிகழ்ச்சியாக 'இளமை - திறமை' என்ற
தலைப்பில் நடன நிகழ்ச்சி, குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில்
நடந்தது. சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் ஷீலா பங்கேற்றார். நீலகிரி
கலாச்சார சங்க தலைவர் சுந்தர் வரவேற்றார்.
பின், 23 வயதே நிரம்பிய இளம் கலைஞர் தீபிகா, தனது பல்முனைத் திறமையை
வெளிக்காட்டினார். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், எம்.எஸ்.விசுவநாதன், தேவா,
வித்யாசாகர் என இசை ஜாம்பவன்களின் இசையில் தான் பாடிய பாடல்களை பாடி,
பார்வையாளர்களின் கரகோஷத்தை பெற்றார்.
பிரபல நடிகர்களுடன் அவர் நடித்த திரைப்பட காட்சிகள் குறும்படமாக
காண்பிக்கப்பட்டன. தனது தனிப்பாடல்கள், கர்நாடக பாடல்களை பாடி அசத்தினார்.
பார்வையாளர்களின் விருப்பமாக, தெலுங்கு, ஹிந்தி பாடல்களையும் பாடினார்.
அவரது குரலின் இனிமைக்கு மெருகேற்ற குருவாயூரப்பன் வயலின், ராதாகிருஷ்ணன்
மிருதங்கம் வாசித்தனர். நீலகிரி கலாச்சார சங்க அமைப்பாளர் அனந்தகிருஷ்ணன்
நன்றி கூறினார்.


