Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஹசாரே தொண்டர்கள் ஊழல் எதிர்ப்பு பிரசாரம்

ஹசாரே தொண்டர்கள் ஊழல் எதிர்ப்பு பிரசாரம்

ஹசாரே தொண்டர்கள் ஊழல் எதிர்ப்பு பிரசாரம்

ஹசாரே தொண்டர்கள் ஊழல் எதிர்ப்பு பிரசாரம்

ADDED : அக் 05, 2011 02:12 AM


Google News
கோவை : ''நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், ஊழல் அரசியல் வாதிகளின் முகத்திரையை கிழிக் கும் வகையில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க தொண்டர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்'' என்று, அன்னா ஹசாரேவின் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை பிரிவைச் சேர்ந்த பாலாஜி பேசினார். கோவையில் அண்ணா ஹசாரேவின் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் அந்த இயக்கத்தின் பிரத்யேக இணைய தள துவக்க விழா நடந்தது. இணைய தளத்தை சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் துவக்கி வைத்து பேசியதாவது:

உங்களை போன்ற எழுச்சியுள்ள இளைஞர்களை இன்றைக்கு இந்தியா முழுவதும் பார்க்க முடிகிறது. இதுதான் அண்ணா ஹசாரே துவங்கியிருக்கும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி. ஊழலுக்கு எதிராக அணி திரண்டிருக்கும் இந்த இளைஞர் பட்டாளம் நம் தேசத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது போன்ற இணைய தளங்களை துவங்குவதன் மூலம் மக்களிடம் நல்ல கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஊழலுக்கு எதிரான கருத்துகளை சுதந்திரமாக பதிவு செய்ய உதவும், என்றார். இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சென்னை பிரிவை சேர்ந்த பாலாஜி பேசியது: நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஊழல் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க தொண்டர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். பணத்திற்காகவும், பதவிக்காகவும் மக்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்கும் போலி வேட்பாளர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம். ஓட்டுரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும், சரியான நபர்களை தேர்ந்தெடுக்கவும் வலியுறுத்தும் வகையில் எங்கள் இயக்க பிரசாரம் அமையும், என்றார். குரல் அமைப்பின் செயலாளர் கிருஷ்ணகுமார், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க கோவை பிரிவை சேர்ந்த லதா, இணையதள வடிவமைப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us