/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரூ.30 ரூபாய் கட்டணத்தில் விதை தரம் அறியலாம்: விவசாயிகளுக்கு அழைப்புரூ.30 ரூபாய் கட்டணத்தில் விதை தரம் அறியலாம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ரூ.30 ரூபாய் கட்டணத்தில் விதை தரம் அறியலாம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ரூ.30 ரூபாய் கட்டணத்தில் விதை தரம் அறியலாம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ரூ.30 ரூபாய் கட்டணத்தில் விதை தரம் அறியலாம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 06, 2011 02:16 AM
கரூர்: கரூர் மாவட்ட விவசாயிகள் நடப்பு பருவத்துக்குரிய நெல் மற்றும் தானிய விதைகளின் தரம் அறிந்து கொண்டு சாகுபடி செய்ய வேளாண்மை துறை அழைப்பு விடுத்துள்ளது.
மாவட்ட விதை பரிசோதனை அலுவலக செய்திக்குறிப்பில் உள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் விதைப்பதற்காக வைத்துள்ள நெல் விதை, மானாவாரி பருவத்தில் விதைக்க வைத்துள்ள பயிறு மற்றும் சிறுதானிய விதைகளை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் விதையின் தரத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையின் கீழ் புதியாக தொடங்கப்பட்டுள்ள விதை பரிசோதனை நிலையத்தை விவசாயிகள் அணுக வேண்டும். விதை குவியலில் இருந்து 100 கிராம், பயிர் ரகம் ஆகியவற்றை எழுதி, தெளிவான முகவரியுடன் கூடிய முகப்பு கடிதத்தை வைத்து மாதிரிக்கு அனுப்பலாம். ஒரு விதை மாதிரி ஆய்வுக்கு ரூ. 30 ரூபாய் மட்டும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. பரிசோதனை செய்யப்படும் விதைகளை, வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், இரண்டாவது குறுக்கு தெரு, திண்ணப்பா நகர், காந்தி கிராம், கரூர்-4 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.