ADDED : அக் 06, 2011 10:16 PM

சிவகங்கை நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,- தி.மு.க.,- காங்., மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இங்கு, நான்கு முனை போட்டி நடக்கிறது. பெரும்பாலான வேட்பாளர்கள் நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு விதத்தில் பாடுபடுவேன் என தெரிவிக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் அர்ச்சுணன், வாக்காளர்களுக்கு தான் வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதியில், நிச்சயம் ஊழல், லஞ்ச லாவயண்யம் அற்ற நேர்மையான நிர்வாகம் கொண்டு வருவேன் என தெரிவித்துள்ளார். பெரும்பாலான வாக்காளர்கள், இந்த வேட்பாளரின் வாக்குறுதியை 'குபீர்' சிரிப்பாக எண்ணி படித்தனர்.
இருந்தாலும் ஒரு சில வாக்காளர்கள், மார்க்சிஸ்ட் வேட்பாளராவது, நகராட்சியில் லஞ்சம், ஊழல் அற்ற நிர்வாகம் நடத்துவேன் என உறுதியாக வாக்குறுதி அளித்துள்ளார். மற்ற வேட்பாளர்கள் அதை சொல்வதற்கு கூட முன்வரவில்லையே என மனவருத்தம் அடைந்தனர். தேர்தல்ல இதெல்லாம் சகஜமப்பா என பேசிக்கொண்டே இடத்தை காலிசெய்தனர்.


