சென்னையில் நோபல் வினாடிவினா போட்டி
சென்னையில் நோபல் வினாடிவினா போட்டி
சென்னையில் நோபல் வினாடிவினா போட்டி
ADDED : செப் 03, 2011 04:33 AM
பெங்களூரூ: இந்தியா சுவீடன் நோபல் நினைவு அமைப்பு இணைந்து நடத்தும் வினாடிவினாபோட்டிவரும் 10-ம் தேதி பெங்களூரூவில் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவ,மாணவியர்களிடையே இந்த வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து மற்ற தகுதி சுற்றுப்போட்டிகள் சென்னை, மும்பை, மற்றும் புனே நகரங்களில் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரங்களில் நடத்தப்பட உள்ளது.
இறுதிப்போட்டி அடுத்த மாதம் 15-ம் தேதி புதுடில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.இந்த வினாடிவினா போட்டியை ஆதித்யா நாத் முபாயி நடத்த உள்ளார். போட்டியில் வெற்றி பெறுபவர்கள் சுவீடன் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு நோபல் மியூசியம் மற்றும்அதனை சார்ந்த துணை அமைப்புகளை சுற்றிப்பார்க்க அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இது போன்ற வினாடிவினா போட்டிகளை மாணவர்கள் மத்தியில் நடத்தும் போது அவர்களிடையே நோபல் பரிசு குறித்து புதிய கருத்துக்களும், சிந்தனைகளும் உருவாகும் என சுவீடன் நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


