ADDED : அக் 08, 2011 10:58 PM
அவிநாசி : அவிநாசி பேரூராட்சி 16வது வார்டு வேட்பாளர் மாரடைப்பால் இறந்ததால், வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.அவிநாசி பேரூராட்சி 16வது வார்டில் காங்., வேட்பாளராக அவிநாசியப்பன் (65) போட்டியிட்டார்.
அவருக்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று மதியம் இறந்தார். அரசியல் கட்சியின் வேட்பாளர் இறந்ததால், 16 வது வார்டில்கவுன்சிலர் தேர்தல் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தேர்தல் அலுவலர் பழனிசாமியிடம் கேட்ட போது, ''16வது வார்டில் காங்., வேட்பாளர் அவிநாசியப்பன் இறந்ததால், அந்த வார்டுக்கான தேர்தல் மட்டும் ஒத்திவைக்கப்படும். தலைவருக்கான தேர்தல் நடக்கும். வேட்பாளர் இறந்தது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.அவிநாசி 16 வது வார்டில், குருசாமி (அ.தி. மு.க.,), கந்தவேல் (தி.மு.க.,), சரவணக்குமார் (தே.மு.தி.க.,), சையத் சலீம் (மா.கம்யூ.,), கண்ணம்மாள், ராதாமணி (சுயே) வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் பிரசாரத்தை கைவிட்டனர்.


