/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கரூர்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளியணை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.உடையாபட்டி மாரிஸ்ட் மேல்நிலைப்பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கில், ஐக்கிய நாடுகள் சபையின் 2011ம் ஆண்டின் குறிக்கோளாகிய 'வனங்கள் உங்கள் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் அடிப்படையாக கொண்டு இன்றைய சுற்றுச்சூழலின் தாக்கங்களின் நிகழ்வுகள், நிலம், நீர், காற்று மாசுபடுதல், பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், பாலிதீன் பிளாஸ்டிக் தீமைகள், எரிப்பதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், வனங்களின் சேவை, மின் சிக்கனம், எரிபொருள் சிக்கனம், தண்ணீர் சிக்கனம் மற்றும் காகித சிக்கனம் ஆகியவற்றை வலியுறுத்தியும், மரங்கள் வளர்ப்பின் அவசியம் பற்றியும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்தர் பேசினார்.கருத்தரங்கில் கடந்தாண்டு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை நல்லமுறையில் பராமரித்த மாணவர்களுக்கும், கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன.


