பா.ஜ., எம்.பி.,க்கள் குழு மதுரை வருகை
பா.ஜ., எம்.பி.,க்கள் குழு மதுரை வருகை
பா.ஜ., எம்.பி.,க்கள் குழு மதுரை வருகை
ADDED : செப் 16, 2011 01:25 AM
மதுரை : பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரிடம் விசாரணை நடத்த பா.ஜனதா எம்.பி.,க்கள் குழுவினர் இன்று மதுரை வருகின்றனர்.ராஜஸ்தான் எம்.பி., அர்ஜூன்ராம், குஜராத் எம்.பி., சோலங்கி, முன்னாள் எம்.பி.,க்கள் ராம்நாத், நிர்மலா(செய்தி தொடர்பாளர்) ஆகியோருடன், மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பொதுச் செயலாளர் நாகராஜன், சுரேந்திரன் உள்பட பலர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.சென்னையில் இருந்து இன்று காலை பாண்டியன் ரயிலில் வரும் அக்குழுவினர், 9 மணிக்கு அரசு
ஆஸ்பத்திரி செல்கின்றனர்.
பின் கலெக்டரை சந்தித்துவிட்டு, பரமக்குடி செல்கின்றனர். பிறகு ராமநாதபுரம் கலெக்டரை
சந்திக்கின்றனர், என மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தெரிவித்தார்.


