ADDED : ஜூலை 25, 2011 11:01 PM
விருத்தாசலம் : விருத்தாசலம் ரோட்டரி சங்கம் மற்றும் ஏ.எம்.சி., மருத்துவமனை இணைந்து ஆஸ்துமா நோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் விருத்தாசலத்தில் நடத்தியது.முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் அமிருதீன் தலைமை தாங்கினார்.
முன்னாள் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் செல்வம் முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.பொருளாளர் ஜாகீர் உசேன், உறுப்பினர்கள் அன்பழகன், சுவாமிநாதன், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.செயலர் செல்வமுருகன் நன்றி கூறினார்.


