/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெல்லிக்குப்பம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆடி மாத உற்சவம்நெல்லிக்குப்பம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆடி மாத உற்சவம்
நெல்லிக்குப்பம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆடி மாத உற்சவம்
நெல்லிக்குப்பம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆடி மாத உற்சவம்
நெல்லிக்குப்பம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆடி மாத உற்சவம்
ADDED : ஜூலை 25, 2011 11:12 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாதம் உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி நர்மதா நகரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாதம் சிறப்பு பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சாகை வார்த்தல், கும்பம் கொட்டுதல் நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு ஆடு பலியிடப்பட்டது. இரவு வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சுவாமி வீதி உலா நடந்தது.விழா ஏற்பாடுகளை பூசாரி முருகன், ஸ்ரீதர், குமார், ரவி ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


