Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அனுமந்தபுரத்தில் மா.கம்யூ., மாநாடு

அனுமந்தபுரத்தில் மா.கம்யூ., மாநாடு

அனுமந்தபுரத்தில் மா.கம்யூ., மாநாடு

அனுமந்தபுரத்தில் மா.கம்யூ., மாநாடு

ADDED : செப் 07, 2011 10:20 PM


Google News
விழுப்புரம்:கெடார் அடுத்த அனுமந்தபுரத்தில் மா.கம்யூ., கிளை மாநாடு நடந்தது.ஜனநாயக வாலிபர் சங்கம் வட்டக்குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.

மா. கம்யூ., வட்ட செயலாளர் சத்திவேல் சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில், அனுமந்தபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப் பணியை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும்.உடைந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும். புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வாலிபர் சங்கம் வட்ட செயலாளர் ராஜிவ்காந்தி, வட்டக்குழு உறுப்பினர் சிவராமன், கிளை செயலாளர் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us