/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காரைக்குடியில் நிலம் அபகரிப்பு அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., மீது புகார்காரைக்குடியில் நிலம் அபகரிப்பு அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., மீது புகார்
காரைக்குடியில் நிலம் அபகரிப்பு அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., மீது புகார்
காரைக்குடியில் நிலம் அபகரிப்பு அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., மீது புகார்
காரைக்குடியில் நிலம் அபகரிப்பு அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., மீது புகார்
ADDED : ஆக 11, 2011 10:48 PM
சிவகங்கை : ஆதி திராவிடர்களுக்கென ஒதுக்கிய 17.5 ஏக்கர் நிலத்தை, காரைக்குடி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,பழனிச்சாமி ஆக்கிரமித்துள்ளதாக பன்னீர்செல்வம் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம்,நாட்டுச்சேரி அருகேயுள்ள அப்பளை கிராமத்தை சேர்ந்த சுப்பன் மகன் கருப்பையா.இவர் நேற்று சிவகங்கை எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அதில், நாட்டுச்சேரி குரூப், அப்பளை கிராம புல எண்: 307/2, 307/8ல் உள்ள நிலங்கள் ஆதிதிராவிடர்களுக்கென ஒப்படைப்பு செய்யப்பட்டது. அங்குள்ள 17.5 ஏக்கர் நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக, காரைக்குடி எம்.எல்.ஏ., பழனிச்சாமி (அ.தி.மு.க.,), தனது மனைவி பஞ்சவர்ணம் பெயரில் பட்டா மாறுதல் செய்து ஆக்கிரமித்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இது குறித்து பன்னீர்செல்வம் எஸ்.பி., கூறுகையில்,'' அப்பளை கிராமத்தை சேர்ந்த சுப்பன் மகன் கருப்பையா என்பவர்,நிலத்தை காரைக்குடி எம்.எல்.ஏ.,பழனிச்சாமி அபகரித்ததாக புகார் கொடுத்தார். அவரது மனுவை பெற்று,விசாரணைக்கு காரைக்குடி டி.எஸ்.பி.,யிடம் ஒப்படைத்துள்ளேன்,'' என்றார். காரைக்குடி எம்.எல்.ஏ., பழனிச்சாமி (அ.தி.மு.க.,) கூறுகையில்,'' 2001ம் ஆண்டே அந்நிலத்தை சட்டப்படி வாங்கியுள்ளேன். அப்போது வாங்கிய நிலத்திற்கு இப்போது புகார் கொடுப்பது ஏன்.அரசியல் காழ்ப்புணர்ச்சியால்,சிலர் தூண்டுதலில் புகார் கொடுக்கின்றனர். சட்டப்படி உள்ள விபரங்களை தருவேன்,'' என்றார்.


