கருணாநிதி பேரன் முன்ஜாமின் கோரி மனு
கருணாநிதி பேரன் முன்ஜாமின் கோரி மனு
கருணாநிதி பேரன் முன்ஜாமின் கோரி மனு
ADDED : செப் 07, 2011 11:21 PM

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், டாக்டர் அறிவுநிதி, முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து. இவரது மகன் டாக்டர் அறிவுநிதி. இவருக்கு எதிராக, வெங்கடேஷ், ராஜேஷ் அண்ணாமலை என்பவர்கள் அளித்த புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை தடுக்கும், சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் அறிவுநிதி மனுத் தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி ராஜசூர்யா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை வேறு நீதிபதியின் விசாரணைக்கு மாற்ற, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.


