நான்கு பவுன் நகை பெண்ணிடம் பறிப்பு
நான்கு பவுன் நகை பெண்ணிடம் பறிப்பு
நான்கு பவுன் நகை பெண்ணிடம் பறிப்பு
ADDED : செப் 10, 2011 03:53 AM
கரூர்: கரூர் கே.வி.பி., நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி சாந்தி (43) இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அதே பகுதியில் கடைக்கு பால் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது டூவிலரில் ஹெல்மெட் அணிந்திருந்த அடையாளம் தெரியாத வாலிபர், சாந்தி கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி விட்டான். இந்த சம்பவத்தால் சாந்தி கழுத்து பகுதியில் சிறிது காயம் ஏற்பட்டது. சாந்தி போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் விசாரிக்கிறார்.


