Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆர்.டி.ஓ., அலுவலகத்தைஅணைக்காடு மக்கள் முற்றுகை

ஆர்.டி.ஓ., அலுவலகத்தைஅணைக்காடு மக்கள் முற்றுகை

ஆர்.டி.ஓ., அலுவலகத்தைஅணைக்காடு மக்கள் முற்றுகை

ஆர்.டி.ஓ., அலுவலகத்தைஅணைக்காடு மக்கள் முற்றுகை

ADDED : செப் 16, 2011 01:37 AM


Google News
திருப்பூர்:அணைக்காடு பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர், ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் ராயபுரம் அருகே உள்ள அணைக்காடு பகுதியில், 5.65 ஏக்கர் நிலத்தில், 60 ஆண்டுகளுக்கு மேலாக 300க்கும் மேற்பட்டோர் குடிசை அமைத்தும், வீடுகள் கட்டியும் குடியிருந்து வருவதாகவும், சிலர் திடீரென வந்து தங்களை காலி செய்யுமாறு மிரட்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, ஆண்களும், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று போலீஸ் ஸ்டேஷனையும், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக்கோரி, திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தையும் நேற்று முற்றுகையிட்டனர்.பொதுமக்கள் கூறியதாவது:பெத்திசெட்டிபுரம் அணைக்காடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 60 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடியிருக்கிறோம். அடிப்படை வசதி மற்றும் மின்சாரம் கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்தோம். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மின் இணைப்பு பெற்றோம்.

இந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என சிலர் கூறி வருகின்றனர். போலியாக பத்திரம் தயாரித்து, எங்களை காலி செய்ய முயற்சித்து வருகின்றனர். இரண்டு மாதத்துக்கு முன், ஆர்.டி.ஓ., ஆய்வு செய்து, குடியிருந்து வரும் எங்களுக்கு பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம்.இந்நிலையில், எங்களை காலி செய்யுமாறு, சிலர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதோடு, குடிசைகளை தீ வைத்து, காலி செய்து விடுவோம் என மிரட்டியும் வருகின்றனர். இதுகுறித்து வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தும், இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றனர்.அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., இல்லாததால், வரும் 17ம் தேதி தீர்வு காணப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். போலீசார் தரப்பில், உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us