/உள்ளூர் செய்திகள்/கரூர்/சின்னதாராபுரம், பரமத்தி வழியாக வேலூருக்கு புதிய பஸ்: அமைச்சர்சின்னதாராபுரம், பரமத்தி வழியாக வேலூருக்கு புதிய பஸ்: அமைச்சர்
சின்னதாராபுரம், பரமத்தி வழியாக வேலூருக்கு புதிய பஸ்: அமைச்சர்
சின்னதாராபுரம், பரமத்தி வழியாக வேலூருக்கு புதிய பஸ்: அமைச்சர்
சின்னதாராபுரம், பரமத்தி வழியாக வேலூருக்கு புதிய பஸ்: அமைச்சர்
ADDED : ஜூலை 19, 2011 12:35 AM
க.பரமத்தி: ''சின்னதாராபுரம், பரமத்தி வழியாக வேலூருக்கு புதிய பஸ் இயக்கப்படும்,'' என சின்னதாராபுரத்தில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். மே தின பொதுக்கூட்டம் சின்னதாராபுரத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் லோகநாதன், ஒன்றிய அவைத்தலைவர் வீராசாமி, பொருளாளர் பொன் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் செந்தில் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: அ.தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் இலவச கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர், 20 கிலோ இலவச அரிசி, அரசுபெண் ஊழியர்களுக்கு ஆறு மாத பேறு கால விடுப்பு, இலவச திருமண நிதியுதவி, பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயுடன் அரை பவுன் தாலி, முதியோர் உதவித்தொகை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது.மக்கள் வசதிக்கேற்ப பள்ளப்பட்டியில் இருந்து சின்னதாராபுரம், பரமத்தி வழியாக வேலூருக்கு புதிய பஸ் இயக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்நாதன், பள்ளப்பட்டி டவுன் பஞ்., நகர செயலாளர் அபுதாகீர், பஞ்சாயத்து தலைவர் குப்பம் பெரியசாமி, சின்னதாராபுரம் ராசாத்தி, புன்னம் கிராம செயலாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.