Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/புளியங்குடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

புளியங்குடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

புளியங்குடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

புளியங்குடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

ADDED : செப் 10, 2011 04:14 AM


Google News
புளியங்குடி : புளியங்குடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள புளியங்குடி வனச்சரகத்தில் யானை, மான், மிளா உள்ளிட்ட விலங்குகளும், அரியவகை மரங்களும் உள்ளன. இந்நிலையில் தற்போது நிலவி வரும் கோடை காலத்தால் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் வனப்பகுதியை விட்டு விலங்குகள் வெளியே வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வேட்டைக்காரர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புளியங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட சோமரந்தான் பீட் பகுதியில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புளியங்குடி வனச்சரகர் ஆர்தர்ராஜா, வனவர் முருகையா, வனக்காப்பாளர்கள் முருகையாபாண்டியன், சங்கர்ராஜா, குருசாமி மற்றும் வனத்துறையினர் சோமரந்தான் பீட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற 4 பேரை பிடித்து நடத்திய விசாரணையில் கருப்பன் (60), பரமசிவன் (45), கலிங்கன் (65), ராசு (49) என்பதும், இவர்கள் வேட்டை நாய்களின் உதவியுடன் மான் ஒன்றை வேட்டையாடி சமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். மாவட்ட வன அலுவலர் அம்புரோஸ் உத்தரவின்படி 4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us