ADDED : செப் 16, 2011 02:20 AM
கூடலூர்: கூடலூரில் தொடரும் மேக மூட்டத்தினால், பகலிலேயே 'மிஸ்ட் லைட்'
பயன்படுத்தி வாகனங்கள் இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கூடலூர் பகுதியில்
கடந்த சில வாரங்களாக இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் மேக மூட்டம்
சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால், இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும்
டிரைவர்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் நிலையுள்ளது.
மழையுடன் மேக மூட்டமும் தொடர்வதால், விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது.
இதனை தடுக்க டிரைவர்கள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க போலீசார்
அறிவுறுத்தியுள்ளனர்.


