/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மாநில ஜூனியர்பாய்ஸ் கபடி போட்டிக்கு மாவட்ட கபடி வீரர்கள் தேர்வுமாநில ஜூனியர்பாய்ஸ் கபடி போட்டிக்கு மாவட்ட கபடி வீரர்கள் தேர்வு
மாநில ஜூனியர்பாய்ஸ் கபடி போட்டிக்கு மாவட்ட கபடி வீரர்கள் தேர்வு
மாநில ஜூனியர்பாய்ஸ் கபடி போட்டிக்கு மாவட்ட கபடி வீரர்கள் தேர்வு
மாநில ஜூனியர்பாய்ஸ் கபடி போட்டிக்கு மாவட்ட கபடி வீரர்கள் தேர்வு
ADDED : செப் 10, 2011 03:33 AM
திருச்செந்தூர் : 38வது மாநில ஜூனியர் பாய்ஸ் கபடி சாம்பியன்சிப் போட்டிக்காக தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பாய்ஸ் கபடி அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழகம் நடத்தும் 38வது மாநில ஜூனியர் பாய்ஸ் கபடி சாம்பியன்சிப் போட்டிகள் செப்.16ம் தேதி முதல் செப்.18 வரை ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயிலில் நடக்க இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பாய்ஸ் கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு கடந்த 6ம் தேதியன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆதித்தனார் கல்லூரி மைதானத்தில் வைத்து நடந்தது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 66 கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகத்தின் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் தலைமையில், இணைச் செயலாளர்கள் மணத்தி கணேசன், நல்லூர் சண்முகசுந்தரம், ஆதித்தனார் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜிம்ரீவ்ஸ் மற்றும் மைக்கேல் ஆகியோர் தேர்வாளர்களாகச் செயல்பட்டு 22 கபடி வீரர்களை தேர்வு செய்தனர். 12 வீரர் கொண்ட இறுதி அணிக்கான தேர்வு மற்றும் பயிற்சி முகாம் நாளை முதல் 15ம் தேதி வரை ஆதித்தனார் கல்லூரியில் நடக்க இருக்கிறது. 38வது மாநில ஜூனியர் பாய்ஸ் கபடி சாம்பியன்சிப் போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பாய்ஸ் கபடி அணிக்கு சண்முகசுந்தரம் மேலாளராக செயல்படுவார். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகத்தின் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் தெரிவித்துள்ளார்.


