/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வேட்பு மனு தாக்கல் கூட்டத்தால் போக்குவரத்து பெரும் பாதிப்புவேட்பு மனு தாக்கல் கூட்டத்தால் போக்குவரத்து பெரும் பாதிப்பு
வேட்பு மனு தாக்கல் கூட்டத்தால் போக்குவரத்து பெரும் பாதிப்பு
வேட்பு மனு தாக்கல் கூட்டத்தால் போக்குவரத்து பெரும் பாதிப்பு
வேட்பு மனு தாக்கல் கூட்டத்தால் போக்குவரத்து பெரும் பாதிப்பு
ADDED : செப் 27, 2011 11:32 PM
ஓசூர்: ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் தினசரி வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் குவிந்துவருவதால், நகராட்சி அலுவலகம் முன் பெங்களூரு சாலையில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஓசூர் நகராட்சி அலுவலகம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ளது. நகராட்சி தேர்தல் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதனால், நகராட்சி தலைவர் மற்றும் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், நகராட்சி கமிஷனர் விமலா, பொறியாளர் தணிக்காசலம் ஆகியோரிடம் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுதாக்கல் செய்ய தினசரி அரசியல் கட்சியினர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன் நான்கு பேர் மட்டும் அலுவலகத்திற்குள் போலீஸார் அனுமதித்து வருகின்றனர். மற்றவர்கள் தாங்கள் வந்த வாகனங்களை நகராட்சி அலுவலகம் முன் சாலையை ஆக்கிரமித்து குறுக்கு, நெடுக்காக தாறுமாறாக நிறுத்தி வேடிக்கை பார்க்கின்றனர். இதனால், நகராட்சி அலுவலகம் வழியாக செல்லும் பஸ்ஸ்டாண்டிற்கு பஸ்கள் தாராளமாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பொதுமக்களும் இரு சக்கர வாகனங்களில் நகராட்சி அலுவலகத்தை கடந்து செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். நகராட்சி அலுவலகம் முன் குறைந்த எண்ணிக்கையில் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளதால், அவர்களால் வேட்புமனு தாக்கல் செய்யும் அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய ஒவ்வொரு வேட்பாளருடன் குறைந்தது 20 பேருக்கு குறையாமல் வந்து செல்வதால், நகராட்சி அலுவலகம் முன் தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


