UPDATED : செப் 03, 2011 08:46 AM
ADDED : செப் 03, 2011 06:56 AM
மதுரை: மதுரையில் மனைவியை கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஸ்டெல்லாமேரி. தம்பதியர் இருவரிடையே அவ்வப்போது பிரச்னை இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு ஒரு மணியளவில் மனைவி ஸ்டெல்லா மேரியை வெங்கடேசன் கொலை செய்தார். பின்னர் தெப்பக்குளம் போலீசில் வெங்கடேசன் சரணடைந்தார். வெங்கடேசனை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


