/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் நகராட்சியுடன் இணையும் சணப்பிரட்டியில் கூடுதல் வீட்டு வாடகை; குடியிருப்பாளர்கள் பீதிகரூர் நகராட்சியுடன் இணையும் சணப்பிரட்டியில் கூடுதல் வீட்டு வாடகை; குடியிருப்பாளர்கள் பீதி
கரூர் நகராட்சியுடன் இணையும் சணப்பிரட்டியில் கூடுதல் வீட்டு வாடகை; குடியிருப்பாளர்கள் பீதி
கரூர் நகராட்சியுடன் இணையும் சணப்பிரட்டியில் கூடுதல் வீட்டு வாடகை; குடியிருப்பாளர்கள் பீதி
கரூர் நகராட்சியுடன் இணையும் சணப்பிரட்டியில் கூடுதல் வீட்டு வாடகை; குடியிருப்பாளர்கள் பீதி
ADDED : ஆக 12, 2011 11:08 PM
கரூர்: விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் நகராட்சியில் இணைக்கப்படும்
சணப்பிரட்டி பஞ்சாயத்தில் வீட்டு வரி உயர்த்தப்படும் என்ற அச்சத்தால்
வீடுகளின் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாடகை
குடியிருப்பாளர்கள் பெரும் பீதியில் உள்ளனர்.மக்கள் தொகை பெருக்கம், த
னிநபர் வருமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக கரூர் நகராட்சியுடன்,
இனாம் கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி மற்றும் சணப்பிரட்டி
பஞ்சாயத்துகள் இணைக்கப்படுகிறது.
கரூர் உள்ளிட்ட மூன்று நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 80
வார்டுகள், 48 வார்டுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரும் உள்ளாட்சி
தேர்தலில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள வார்டுகளின் அடிப்படையில் தேர்தல்
நடத்தப்படுகிறது. சணப்பிரட்டி பஞ்சாயத்து, கரூர் நகராட்சியுடன்
இணைக்கப்படுவதால், கூடுதலாக வீட்டு வரி விதிக்கப்படும் என்ற அச்சம் வீ டு
உரிமையாளரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டு உ ரிமையாளர்கள் வாடகையை
தற்போது பல மடங்கு உயர்த்தி வருகின்றனர். இதனால் சணப்பிரட்டி பஞ்சாயத்து
பகுதியில் வா டகை வீடுகளில் குடியிருக்கும், பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
எனவே, கரூர் நகராட்சியுடன், சணப்பிரட்டி பஞ்சாயத்து இணைக்கப்படும்
பட்சத்தில் வீ ட்டு வரி உயர்த்தப்படுமா? அல் லது பழைய நிலையிலேயே வ
சூலிக்கப்படுமா? என்பது குறித் து கரூர் நகராட்சி மற்றும் சணப்பிரட்டி
பஞ்சாயத்து நிர்வாகம் பொதுமக்களுக்கு விளக்க வேண்டியது அவசியம்.


