Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரூ.1.57 லட்சம் திருட்டு

ரூ.1.57 லட்சம் திருட்டு

ரூ.1.57 லட்சம் திருட்டு

ரூ.1.57 லட்சம் திருட்டு

ADDED : ஆக 29, 2011 12:12 AM


Google News
மதுரை : மதுரை சதாசிவநகரைச் சேர்ந்தவர் குருநாதன்,68.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர். நேற்று முன் தினம் அண்ணாநகரில் உள்ள வங்கி ஒன்றில், ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாயையும், அரவிந்த் கண் ஆஸ்பத்திரி அருகேயுள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.49 ஆயிரத்தையும் எடுத்தார். தான் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்துடன், 'சீட்' அடியில் வைத்துக் கொண்டு டூவீலரில் புறப்பட்டார். அண்ணாநகர் மெயின் ரோட்டில் வந்தபோது, டயர் பஞ்சரானது. மெக்கானிக்கிடம் கொண்டு சென்றபோது, பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us