Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உண்மையான நில அபகரிப்பு குறித்த புகார் மீது கடும் நடவடிக்கை : எஸ்.பி.,

உண்மையான நில அபகரிப்பு குறித்த புகார் மீது கடும் நடவடிக்கை : எஸ்.பி.,

உண்மையான நில அபகரிப்பு குறித்த புகார் மீது கடும் நடவடிக்கை : எஸ்.பி.,

உண்மையான நில அபகரிப்பு குறித்த புகார் மீது கடும் நடவடிக்கை : எஸ்.பி.,

ADDED : ஜூலை 17, 2011 02:24 AM


Google News
ஈரோடு:''உண்மையாக, மனசாட்சிக்கு விரோதமில்லமால் நில அபகரிப்பு சம்பந்தமாக அளிக்கப்படும் புகார்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறினார்.தி.மு.க., ஆட்சியின் போது தமிழகத்தில் ஆளும் கட்யினரால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்படும், என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இதற்காக தனிப்பிரிவு துவங்கப்பட்டு நூற்றுக்கணக்கான புகார்கள் பெறப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உளவு போலீஸாரும் ரகசிய தகவல்களை சேகரித்து அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு வழக்குக்கான சிறப்பு பிரிவு, எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த 27ம் தேதி துவங்கி, இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில், ஆறு எஸ்.ஐ.,க்கள், பத்து ஏட்டுகள் கொண்ட சிறப்பு படை செயல்படுகிறது.இதுவரை 149 புகார்கள் பெறப்பட்டுள்ளன. கவுரவப் பிரச்னை, குடும்ப பிரச்னை, வயல், வரப்பு, வாய்க்கால் பிரச்னை, கேலிக்கூத்தான புகார் மனுக்களும் உள்ளன.பெறப்பட்ட மனுவில், இருதரப்பினருக்கான கலந்தாய்வு கூட்டம் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் நேற்று மதியம் நடந்தது.

ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் செல்வக்குமார், மகேந்திரன் முன்னிலை வகித்தனர். புகார்களை பகுதி வாரியாக பிரித்து விசாரிக்க எஸ்.பி., உத்தரவிட்டார்.பின், எஸ்.பி., கூறியதாவது:புகார்தாரர்களிடம் இதுவரை 149 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 40 மனுக்கள் விசாரணைக்கு தகுதியுடைய மனுக்கள். மூன்று மனுக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும். இதற்காக அரசு வக்கீல் கண்ணன் என்பவர் வந்துள்ளார்.புகார் விசாரணையின் பேரில் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உண்மையாக, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் அளிக்கப்படும் மனுக்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us