/உள்ளூர் செய்திகள்/சேலம்/அத்தை மகளை தாக்கிய வாலிபர் அதிரடி கைதுஅத்தை மகளை தாக்கிய வாலிபர் அதிரடி கைது
அத்தை மகளை தாக்கிய வாலிபர் அதிரடி கைது
அத்தை மகளை தாக்கிய வாலிபர் அதிரடி கைது
அத்தை மகளை தாக்கிய வாலிபர் அதிரடி கைது
ADDED : ஆக 09, 2011 01:57 AM
வாழப்பாடி: வாழப்பாடி அருகே அத்தை மகளை தாக்கிய வாலிபரை, வாழப்பாடி
போலீஸார் கைது செய்தனர்.வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி, பெருமாபாளையம்
கிராமத்தை சேர்ந்த கந்தன் மகன் அப்பு (26).
பெயிண்டராக பணிபுரிந்து
வருகிறார். அவரது அக்காள் பிரியா(28), அதே பகுதியில் பெட்டிக்கடை
வைத்துள்ளார். பிரியாவின் நடத்தை சரியில்லை எனக்கூறி அவரை அப்பு
கண்டித்துள்ளார்.அப்போது அங்கு வந்த அப்புவின் அத்தை மகளான தேன்மொழி(32),
அப்புவை தட்டிக்கேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த வாலிபர் அப்பு,
பிரியாவின் பெட்டிக்கடையில் இருந்த இரும்பு சேரை எடுத்து, தேன்மொழியை
தாக்கியுள்ளார். அதில் காயமடைந்த தேன்மொழி, சேலம் அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி
போலீஸார், அத்தை மகளை தாக்கிய வாலிபர் அப்புவை கைது செய்து, விசாரணை
நடத்தி வருகின்றனர்.


