/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பெரம்பலூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் ரூ.30 ஆயிரம் கொள்ளைபெரம்பலூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் ரூ.30 ஆயிரம் கொள்ளை
பெரம்பலூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் ரூ.30 ஆயிரம் கொள்ளை
பெரம்பலூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் ரூ.30 ஆயிரம் கொள்ளை
பெரம்பலூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் ரூ.30 ஆயிரம் கொள்ளை
ADDED : அக் 06, 2011 03:37 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சூப்பர் மார்ககெட்டில் 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் சேகர் (42). இவர் துறைமங்கலம் நான்கு ரோடு
பகுதியில் சிந்து என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவர்
நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று
காலை எட்டு மணியளவில் சேகர் வழக்கம் கடையை திறக்க வந்தார். அப்போது
கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள்
சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் ரூபாய்
கொள்ளையடிக்கப்படிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சேகர் பெரம்பலூர் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில்
பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து, சேகரின்
சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.


