/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/திருவாரூரில் கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் 2 பேர் நசுங்கி பலிதிருவாரூரில் கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் 2 பேர் நசுங்கி பலி
திருவாரூரில் கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் 2 பேர் நசுங்கி பலி
திருவாரூரில் கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் 2 பேர் நசுங்கி பலி
திருவாரூரில் கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் 2 பேர் நசுங்கி பலி
ADDED : ஆக 06, 2011 02:06 AM
திருவாரூர்: திருவாரூர் அருகே புதிதாக கட்டப்பட்டும் வீட்டின் போர்டிகோ இடிந்து விழுந்ததில் அதில் வேலை பார்த்த ஊழியர்கள் இரண்டு பேர் பலியாகினர்.
திருவாரூர் அருகே புலிவலம் கீழ்த்தெருவில் வசித்து வருபவர் கண்ணப்பன். இவர் எண் கணித ஜோதிடர். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன் வீட்டின் முன்பக்கம் போர்டிகோவில் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. அதற்காக அமைக்கப்பட்டிருந்த பலகைகள் நேற்று மதியம் 1 மணியளவில் பிரிக்கப்பட்டது. அப்போது, போர்டிகோ இடிந்து விழுந்தது. இதில், வேலை பார்த்த கட்டிடத்தொழிலாளர்கள் திருவாரூர் அருகே சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி அமுதா (45), புலவலம் கீழத்தெருவை சேர்ந்த செல்லத்துரை (66) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சம்பவ இடத்தில் இறந்தனர். சாந்தகுடியை சேர்ந்த கொத்தனார் செல்வம் (40) பலத்த காயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவாரூர் தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.