Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/தி.மு.க., ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை யார் : சேலத்தில் தொண்டர்கள் குழப்பம்

தி.மு.க., ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை யார் : சேலத்தில் தொண்டர்கள் குழப்பம்

தி.மு.க., ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை யார் : சேலத்தில் தொண்டர்கள் குழப்பம்

தி.மு.க., ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை யார் : சேலத்தில் தொண்டர்கள் குழப்பம்

ADDED : ஆக 01, 2011 04:12 AM


Google News
சேலம் : சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி, இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சேலத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு யார் தலைமையேற்று நடத்துவார்கள் என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.சேலம் மாவட்ட தி.மு.க.,வில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மாநில இளைஞர் அணி செயலாரும் மாஜி எம்.எல்.ஏ.,வுமான ராஜேந்திரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடக்கும் நடக்கும் ஆர்ப்பாட்டத்தை யார் தலைமையேற்று நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கிய மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நேற்று முன்தினம் காலையில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை கைது செய்து அழைத்துச் சென்ற போது, போலீஸ் வாகனத்தை தடுத்த மாஜி எம்.எல்.ஏ., சிவலிங்கம், மாநகர பொருளாளர் அன்வர் உட்பட 20க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 29 காலையில் சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் குறித்த நோட்டீஸ்களை விநியோகித்த மாஜி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் மேயர் சூடாமணி, முன்னாள் துணை மேயர் சுபாஷ் உட்பட முக்கிய நிர்வாகிகளையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தி.மு.க.,வினர் போராட்டம் அறிவித்ததை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாமாக தி.மு.க., முக்கிய புள்ளிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர். சேலம் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷக்குமார் தேடப்படும் குற்றவாளியாக உள்ளதால், அவரும் கலந்து கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.நில அபகரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள வீரபாண்டி தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ., ராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் கைது செய்ய தடை பெற்றுள்ளார். இருப்பினும், அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.மாநகர அவைத் தலைவர் கலையமுதன் இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தை வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையில், ராஜ்ய சபா எம்.பி., செல்வகணபதியை தலைமை வகிக்கும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், அவரது தலைமையை வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்வார்களாக என்பது கேள்விக் குறியாக உள்ளது.இந்நிலையில், சேலம் மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்க துணை கமிஷனர் சத்ய பிரியா தலைமையில் மூன்று உதவி கமிஷனர்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீஸாரின் எட்டு கம்பெனிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம், பேரணியில் கலந்து கொள்பவர்கள் அனைவரையும் கைது செய்து தங்க வைக்க, சேலம் போஸ் மைதான கலையரங்கம், சோகேஸ் ஹால், கமலா மஹால் உட்பட ஆறு திருமண மண்டபங்களும் தயார் நிலையில் உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us