Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காரைக்குடியில் சூறாவளி20 மரங்கள் சாய்ந்தன 18 மணி நேர மின் தடை

காரைக்குடியில் சூறாவளி20 மரங்கள் சாய்ந்தன 18 மணி நேர மின் தடை

காரைக்குடியில் சூறாவளி20 மரங்கள் சாய்ந்தன 18 மணி நேர மின் தடை

காரைக்குடியில் சூறாவளி20 மரங்கள் சாய்ந்தன 18 மணி நேர மின் தடை

ADDED : அக் 04, 2011 11:27 PM


Google News
காரைக்குடி:காரைக்குடியில் நேற்று முன்தினம் இரவு அடித்த சூறாவளி காற்றால், 20க்கும் மேற்பட்ட மரக்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் 18 மணி நேரத்திற்கும் அதிகமாக மின் தடை ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு லேசான தூறல் விழுந்தது. அதை தொடர்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இரவு 7 மணிக்கு துவங்கிய மழை 10 மணி வரை நீடித்தது. தாலுகா அலுவலகம், டி.டி., நகர் 7வது தெரு, கல்லூரி சாலை, அரியக்குடி, சுப்பிரமணியபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. ரோட்டின் குறுக்கே விழுந்த மரங்களால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 18 மணி நேர மின்தடை: பல இடங்களில் மின்கம்பி மீது மரங்கள் விழுந்ததால், நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் நேற்று பிற்பகல் 2.30 மணி வரை காரைக்குடியில் மின் தடை ஏற்பட்டது. 18 மணி நேர மின் தடையால் வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மின் வாரிய செயற்பொறியாளர் கூறுகையில், '' காரைக்குடியில் பலத்த காற்று வீசியது. சுப்பிரணியபுரம், மகர்நோம்பு பொட்டல், கழனிவாசல், அரியக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள பல மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்தது. மின்னலால் கோட்டையூர் மற்றும் கண்டனூரில் 2 'டிரான்ஸ்பார்மர்கள்' பழுதடைந்தன. ஆட்கள் பற்றாக்குறையால் திருப்புத்தூர், சிவகங்கை பகுதிகளில் இருந்து ஊழியர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us