ஜூலை மாதத்தில் 3 பெரும் ரயில் விபத்துக்கள்; தொடரும் விபத்துக்கு யார் பொறுப்பு ?
ஜூலை மாதத்தில் 3 பெரும் ரயில் விபத்துக்கள்; தொடரும் விபத்துக்கு யார் பொறுப்பு ?
ஜூலை மாதத்தில் 3 பெரும் ரயில் விபத்துக்கள்; தொடரும் விபத்துக்கு யார் பொறுப்பு ?

கோல்கட்டா: ஒரு மாதத்தில் 3 ரயில் விபத்துக்கள் நடந்து பலர் உயிர் காவு வாங்கப்பட்டிருந்தும், இது வரை விபத்துக்கு காரணமான ஊழியர்களோ அல்லது நக்சல்களோ தண்டிக்கப்படவில்லை என்பதுதான் பெரும் கவலையான விஷயமாக கருதப்படுகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் இரண்டு பெரும் ரயில் விபத்துக்கள் நடந்தன. தடம் புரண்டது ஒன்று மற்றொன்று, தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு. விபத்தில் சிக்கியது கல்கா எக்ஸ்பிரஸ், கவுகாத்தி பூரி எக்ஸ்பிரஸ் ரயில். 75 பேர் பலியாயினர் . 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
இந்நிலையில் மாத இறுதிநாளான நேற்று 3 வது ரயில் விபத்தாக இரவில் மேற்குவங்கம் மால்டா ஸ்டேஷன் அருகே கவுகாத்தி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்நேரத்தில் எதிரே வந்த லோக்கல் ரயில் ஒன்று தடம் புரண்டு கிடந்த ரயில் மீது மோதியது. இதில் 8 பெட்டிகள் சின்னாபின்னமானது. தொடர்ந்து சில பெட்டிகளில் தீயும் பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு ரயில்வே மீட்பு படையினர் விரைந்து காயமுற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக தகவல் வந்திருக்கிறது. பலி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 3 பேர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கிழக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் சமீர் கோஸ்வாமி இது குறித்து கூறுகையில்; இந்த ரயில் விபத்து நடந்ததற்கான காரணத்தை இப்போது கண்டுபிடிக்க முடியாது. ரயில் பெட்டிக்குள் பலர் சிக்கியிருக்கின்றனர். முதலில் காயமுற்றவர்களை மீட்கும் பணியில் இறங்கியிருக்கிறோம். பின்னர் முழுத்தகவல்கள் தெரிவிக்கிறோம் என்றார். ரயில்வே துறை அமைச்சர் திரிவேதி கூறுகையில் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது இன்னும் ரயில் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.
கடந்த ஆண்டில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தகர்க்கப்பட்டு விழுந்து கிடந்தபோது மற்றொரு ரயில் இதனுடன் மோதியதில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இன்றும் இதே மாடலாகத்தான் விபத்து நடந்திருக்கிறது ஆனால் உயிர்ப்பலி மட்டும் குறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது. பயணிகள் பலர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
இதுவரை நடந்து முடிந்த விபத்துக்கு காரணமானவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட போலீசார் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு நக்சல்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். நக்சல்கள்தான் காரணம் என்று அரசு தரப்பில் வெளிப்படையாக கூற தயங்கும் அதேவேளையில் குற்றவாளிகளை பிடிக்கவும் லாயக்கில்லாத நிலையில் இருப்பது தான் கூடுதல் கவலை தரும் விஷயம்.