Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாதிக்கும் லட்சியம் வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பேச்சு

சாதிக்கும் லட்சியம் வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பேச்சு

சாதிக்கும் லட்சியம் வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பேச்சு

சாதிக்கும் லட்சியம் வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பேச்சு

ADDED : ஜூலை 19, 2011 09:24 PM


Google News

பேரூர் : 'இளைஞர்களிடம் சாதிக்கும் லட்சியம் இருக்கவேண்டும்,' என, காந்திகிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க் கண்டன் பேசினார்.

பேரூர் தமிழ்கல்லூரியில் கல்வி எழுச்சிநாள் விழா நடந்தது. இதில், பேரூராதீனம் சாந்தலிங்கராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: ஒவ்வொரு மனிதனையும் பண்பு, குணம், ஒழுக்கம் உடையவனாக கல்வி உயர்த்துகிறது. கல்வியின் மூலம் வாழ்க்கையை பெருமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும். அன்றைய காலத்தில் கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்காத எட்டாக்கனியாக இருந்தது. கல்வியின் முக்கியத்துவம் தெரியவில்லை; கையெழுத்து போடும் அளவுக்கு படித்தாலே போதும் என்ற மனோபாவம் இருந்தது.

இன்றைக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், ஏராளமான குக்கிராமங்களில் இன்னும் கல்வி முழுமையாக சென்றடையவில்லை. கல்வியில் முழு வளர்ச்சிப் பெற்றால் தான் நம்நாடு முன்னேறும். அதற்கான பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, பேரூராதீனம் சாந்தலிங்கராமசாமி அடிகள் பேசினார்.

காந்திகிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் பேசியதாவது: அன்றைய காலத்தில் காந்தி, காமராஜ் போன்ற தலைவர்கள் மக்களுக்காக சிந்தித்தார்கள். மிக எளிமையாக மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். ஆனால், இப்போது நமது நாட்டிலுள்ள தலைவர்களோ மக்களை பற்றி சிந்திக்காமல் கார்களில் பவனி வந்து கொண்டிருக்கின்றனர். பணம், புகழ், பதவி, ஆசை ஆகிய வட்டத்துக்குள் சிக்கி, மக்கள் சேவையை மறந்து விட்டனர். ஒவ்வொருவரின் எண்ணம், செயலும் நன்றாக இருந்தால் தான், சமுதாயம் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால், வன்முறை, குண்டுவெடிப்பு, ஊழல், கொள்ளை என, நாட்டில் நிம்மதி குலைந்து விடும். சமுதாயத்தில் நடக்கும் கெட்ட விஷயங்களை அப்புறப்படுத்திவிட்டு, நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞரிடமும் சாதிக்கும் லட்சியம் வேண்டும். அப்போது தான், இந்தியா எழுச்சி பெறும்.இவ்வாறு, மார்க்கண்டன் பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us