ADDED : செப் 17, 2011 09:45 PM
திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
இதற்கான பணிகளில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சட்டசபை தேர்தலில் பயன்படுத்திய வாக்காளர் பட்டியல், உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்தப்பட உள்ளது. சட்டபை தொகுதி வாரியாக இருந்த வாக்காளர் பட்டியலை, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய கவுன்சில், ஊராட்சி வாரியாக பிரிக்கும் பணியில், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.இப்பணியை முடித்து செப்., 15 ல், வாக்காளர் பட்டியல் வெளியிட, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஆனால் பணிகள் முடியாததால், பட்டியல் வெளியீடு, செப்., 19 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன. வாக்காளர் பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது.இப்பணி முடிவடைந்து, நாளை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி அலுவலகங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இதன் பின், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும்.ஓட்டு இயந்திரம் தயார்: உள்ளாட்சி தேர்தலில் 1400 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளன.திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில் முதன்முறையாக மின்னணு ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்படவுள் ளது. நகராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கு தலா ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படும். இதற்காக 1400 இயந்திரங்கள், மாவட்ட கருவூலத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.