/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காந்தி கிராம பல்கலை வேந்தர் பதவி : துணை ஜனாதிபதி ராஜினாமாகாந்தி கிராம பல்கலை வேந்தர் பதவி : துணை ஜனாதிபதி ராஜினாமா
காந்தி கிராம பல்கலை வேந்தர் பதவி : துணை ஜனாதிபதி ராஜினாமா
காந்தி கிராம பல்கலை வேந்தர் பதவி : துணை ஜனாதிபதி ராஜினாமா
காந்தி கிராம பல்கலை வேந்தர் பதவி : துணை ஜனாதிபதி ராஜினாமா
ADDED : ஆக 11, 2011 10:36 PM
காந்திகிராமம் : திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலை வேந்தர் பதவியை, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ராஜினாமா செய்தார்.
காந்திகிராம கிராமிய கல்வி நிறுவனம் 1956 ல் துவக்கப்பட்டு, 1976 ல், நிகர்நிலை அந்தஸ்து பெற்றது. இதன் முதல் வேந்தராக கஜேந்திர கட்கர்; பிறகு, பல்கலை நிறுவனர் சவுந்தரம் இருந்தனர். கடந்த 1985 ல், அப்போதைய துணை ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், வேந்தராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு, துணை ஜனாதிபதியை, வேந்தராக தேர்வு செய்வது மரபானது. முன்னாள் துணை ஜனாதிபதிகள் சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், கிருஷ்ணகாந்த், பைரோன்சிங் ஷெகாவத் வேந்தராகினர். இவர்களின் பதவி காலம், மூன்று ஆண்டுகள்; சூழலுக்கு ஏற்ப பதவி நீட்டிப்பு செய்யப்படும். இதன்படி, 2007 அக்டோபரில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2010 ல், பதவி நீடிக்கப்பட்டது. இவரது பதவிக்காலம் 2013 ல், முடிகிறது. இந்நிலையில் அவர், வேந்தர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. பல்கலை வரலாற்றில், வேந்தர் பதவியை ராஜினாமா செய்வது, இதுவே முதல் முறை. இதுகுறித்து துணைவேந்தர் ராமசாமி கூறுகையில், ''ஆக., 25 ல், செனட் கூட்டம் நடக்கிறது. இதில் ராஜினாமா குறித்து ஆலோசிக்கப்படும்,'' என்றார்.


