ADDED : ஜூலை 19, 2011 09:47 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் நாச்சிமுத்து பிரசவ விடுதியில் 'லேப்ரோஸ்கோபிக்' குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு உதவி அறுவை சிகிச்சை நிபுணர் சுமதி, மயக்க மருந்து நிபுணர் மாரிமுத்து ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனை டாக்டர்கள்
கூறியதாவது:மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறை 'லேப்ரோஸ்கோபிக்' குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை குறித்த முகாம்கள் நடந்து வருகிறது.கடந்த வாரங்களில் கோட்டூர், வேட்டைகாரன்புதூர் போன்ற பகுதிகளில் நடந்தது. நெகமம், நல்லட்டிப்பாளையம் போன்ற பகுதிகளில் முகாம்கள் நடக்க உள்ளது. நேற்று நடந்த முகாமில் மூன்று பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, என்றனர்.


