Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேர்தல் பணி செய்வதில் தயக்கம் கூடாது

தேர்தல் பணி செய்வதில் தயக்கம் கூடாது

தேர்தல் பணி செய்வதில் தயக்கம் கூடாது

தேர்தல் பணி செய்வதில் தயக்கம் கூடாது

ADDED : அக் 08, 2011 10:58 PM


Google News
திருப்பூர் : ''தேர்தல் பணியில் தயக்கம் காட்டுவோர் மீது தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்கும்,'' என மாவட்ட தேர்தல் அலுவலர் மதிவாணன் பேசினார்.திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 177 பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில், மைக்ரோ அப்சர்வர்களை நியமனம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மதிவாணன் தலைமை வகித்தார். எஸ்.பி., பாலகிருஷ்ணன், டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, நகராட்சிகள் நிர்வாக மண்டல துணை இயக்குனர் விஜயலட்சுமி, கமிஷனர் ஜெயலட்சுமிமுன்னிலை வகித்தனர்.கலெக்டர் மதிவாணன் பேசியதாவது:மாவட்டத்தில் 2,434 ஓட்டுச் சாவடிகள் அமைய உள்ளன. வரும் 17ம் தேதி 1,336 ஓட்டுச்சாவடிகளிலும், 19ம் தேதி 1,098 ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இவற்றில் மொத்தம் 524 ஓட்டுச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள் ளன. முதல்கட்டமாக தேர்தல் நடக்க உள்ள ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை கண்காணிக்க 'மைக்ரோ அப்சர்வர்'கள் நியமிக்கப்படுகின்றனர்.மாநகராட்சியில் உள்ள 425 ஓட்டுச்சாவடி களில், 177 ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என கண்டறியப்பட்டுள்ளது. மைக்ரோ அப்சர்வர்கள், வேட்பாளர்களின் செலவு விவரங்களை முறையாக கணக்கிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செலவிடும் வேட்பாளர், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதபடி தண்டனை வழங்கப்படும்.மாவட்டத்தில், 10 ஆயிரத்து 725 'மைக்ரோ அப்சர்வர்'கள் தேவைப்படுகின்றனர்; ஆனால் முக்கிய துறைகளில் ஆட்கள் குறைவாக இருப்பதால், 4,750 பேர் மட்டுமே உள்ளனர். கவனக்குறைவால் தவறு நிகழ்ந்தால், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில், இதுவரை 87 அதிகாரிகள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கல்லூரி விரிவுரையாளர்கள் 70 பேருக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டது. அதில், 20 பேர் பணியை ஏற்க வராததால், அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.தேர்தல் கமிஷன் கொடுக்கும் தேர்தல் பணிகளை, சில வங்கியாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது; வங்கியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண் டும். தேர்தல் பணி வழங்கும் போது, அதை ஏற்பது கடமை; தேர்தல் பணியை ஏற்பதில் தயக்கம் காட்டினால், தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்கும். விரைவில் கணக்கெடுப்பு நடத்தி, நாளை மாலைக்குள், வங்கி பணியாளர் விவரங்களை தெரிவித்து, 'மைக்ரோ அப்சர்வர்' பணிகளை துவக்க ஆயத்தமாக வேண்டும்.இவ்வாறு, மதிவாணன் பேசினார். வங்கி கிளை பிரதிநிதிகள் பங்கேற்றனர்; பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்துவது குறித்து, எஸ்.பி.,யுடன் ஆலோசனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us