/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு அருகே கனிமவளம் கொள்ளை வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் பாராமுகம்செங்கல்பட்டு அருகே கனிமவளம் கொள்ளை வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் பாராமுகம்
செங்கல்பட்டு அருகே கனிமவளம் கொள்ளை வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் பாராமுகம்
செங்கல்பட்டு அருகே கனிமவளம் கொள்ளை வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் பாராமுகம்
செங்கல்பட்டு அருகே கனிமவளம் கொள்ளை வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் பாராமுகம்
ADDED : ஜூலை 27, 2011 03:05 AM
காஞ்சிபுரம் : செங்கல்பட்டு அருகே, நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு
சாய்த்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை, சமூக விரோதிகள்
கொள்ளை அடித்து வருகின்றனர். மலை, பெரிய பள்ளத்தாக்காக மாறிய போதும்,
அதிகாரிகள் பாராமுகமாக இருப்பது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், மறைமலைநகர், ஆலத்தூர், ஸ்ரீபெரும்புதூர்,
ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை பகுதியில், தொழிற்பேட்டைகள் உருவாகியுள்ளன.
ஒவ்வொரு தொழிற்பேட்டையிலும், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளின் கட்டுமானப்
பணிகள் நடந்து வருகின்றன.கட்டுமானப் பணிகளுக்கான மணல் தேவை, மாவட்டத்தில்
ஓடும் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறுகள் பூர்த்தி செய்கின்றன. செங்கல் தேவை,
தனியார் சூளைகள் மூலம் நிறைவு செய்யப்படுகிறது. கருங்கல் ஜல்லிகளின் தேவை,
மலைகளில், தனியாருக்கு விடப்படும் கல்குவாரிகள் மூலம்,
நிறைவேற்றப்படுகிறது.பள்ளங்களை நிரப்பி சமன் செய்யவும், சாலைகள்
அமைக்கவும், கிராவல் மண், செம்மண் தேவைப்படுகிறது.
இவற்றுக்கு, தனியே
குவாரிகள் எதுவும் இல்லை. தேவை அதிகமாக உள்ளதால், பாறைகள் நிறைந்த
பகுதிகளில், கிராவல் மண் கொள்ளை, அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக,
செங்கல்பட்டு, உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதிகளில், மலைகள்
அதிகமாக உள்ளதால், அங்கு கிராவல் மண் கொள்ளை அதிகமாக உள்ளது. தடுக்க
வேண்டிய அதிகாரிகளும் பாராமுகமாக உள்ளனர்.மரங்கள் வேரோடு சாய்ப்பு:
செங்கல்பட்டு அடுத்த பட்ரவாக்கம் பகுதியில், வனத்துறை சார்பில், பல ஏக்கர்
பரப்பளவிற்கு நாவல், இலுப்பை, புங்கன், புளியன், வேம்பு போன்ற மரங்கள்
வளர்க்கப்பட்டன. அப்பகுதியில் சிலர், ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன்,
பல ஏக்கர் பரப்பளவில், 20 அடி ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்து, அப்பகுதி
முழுவதையும் பள்ளத்தாக்குபோல் மாற்றி விட்டனர். அதிகாரிகளின் துணையின்றி,
இவ்வளவு ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்து சென்றிருக்க முடியாது என புகார்
எழுந்துள்ளது.செங்கல்பட்டு வனச்சரகர் (காப்புக்காடு) தங்கமுத்து
கூறும்போது,''மண் கொள்ளை நடந்த இடம், காப்புக்காடு பகுதி இல்லை. வருவாய்
துறைக்கு சொந்தமான, புறம்போக்கு இடம். அதில், சமூகக் காடுகள் கோட்டம்
சார்பில், வனத்துறையினர் மரங்களை நட்டுள்ளனர்,'' என்றார்.''வருவாய் துறை
புறம்போக்கு நிலங்களில் தான் மரங்களை நட்டுள்ளோம். பட்ரவாக்கம் பகுதியில்,
2008ம் ஆண்டிற்கு முன்புதான் மரங்கள் நட்டோம். அதன் பிறகு எந்த
மரக்கன்றுகளையும், அப்பகுதியில் நடவில்லை. எனினும், நீங்கள் குறிப்பிட்ட
இடத்தை உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கிறேன்,'' என, செங்கல்பட்டு
கோட்ட சமூகக் காடுகள் வன அலுவலர் ரவி தெரிவித்தார்.
என்.ஏ.கேசவன்