/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/"காலைக்கதிர்' செய்தி எதிரொலிஉயர்மின் அழுத்த கம்பியை அகற்ற மின் வாரியம் நடவடிக்கை"காலைக்கதிர்' செய்தி எதிரொலிஉயர்மின் அழுத்த கம்பியை அகற்ற மின் வாரியம் நடவடிக்கை
"காலைக்கதிர்' செய்தி எதிரொலிஉயர்மின் அழுத்த கம்பியை அகற்ற மின் வாரியம் நடவடிக்கை
"காலைக்கதிர்' செய்தி எதிரொலிஉயர்மின் அழுத்த கம்பியை அகற்ற மின் வாரியம் நடவடிக்கை
"காலைக்கதிர்' செய்தி எதிரொலிஉயர்மின் அழுத்த கம்பியை அகற்ற மின் வாரியம் நடவடிக்கை
ADDED : செப் 08, 2011 02:48 AM
நாமக்கல்: 'சேலம்-கரூர் அகல ரயில் பாதைக்காக, கொசவம்பட்டியில் மெகா பாலம்
அமைக்கும் இடத்தில் இருந்த உயர் மின் அழுத்த கம்பிகளை மின்
வாரியத்துறையினர் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.சேலம்-கரூர் இடையே ரயில்
பாதை அமைக்கும் பணி நாமக்கல், மோகனூர், ராசிபுரம் பகுதியில் கடந்த 13
ஆண்டுகளாக நடக்கிறது. ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கிய சில மாதத்தில்
பல்வேறு பிரச்னை இருந்ததால், அவ்வப்போது முடக்கம் ஏற்பட்டது.தற்போது, அவை
சரிசெய்யப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. மாவட்ட
நிர்வாகம் தலையிட்டு தேவையான நிலத்தை கையகப்படுத்தி, ரயில்வே
நிர்வாகத்திடம் ஒப்படைத்து நில ஆர்ஜித பிரச்னைக்கு முற்றுபுள்ளி
வைத்தது.நாமக்கல், கொசவம்பட்டியில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க இடம் தேர்வு
செய்யப்பட்டு, 5,000 சதுரடி பரப்பில், 3.12 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு
அடுக்கு மாடி கட்டடம் மற்றும் மூன்று பிளாட் பார்ம்கள் கட்டும் பணி
முடியும் தருவாயில் உள்ளது. மாவட்டத்தில் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள்
அமைக்க தேர்வு செய்யப்பட்ட ராசிபுரம், மோகனூர் ஆகிய பகுதியிலும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்செங்கோடு 'ஈகிள் எர்த் மூவர்ஸ்'
நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில், 10 கோடி ரூபாய் மதிப்பில்,
நாமக்கல்-துறையூர் சாலை கொசவம்பட்டியில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த ஒரு
மாதத்துக்கு முன் துவங்கப்பட்டது. டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கும்
வகையில், பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதற்கு முட்டுக்கட்டை போடும்
வகையில், பாலம் அமைக்கும் இடத்தில் கம்பங்கள் அமைத்து உயர்மின் அழுத்த
கம்பிகம் கொண்டு செல்லப்பட்டது. அந்த கம்பம் மற்றும் கம்பிகளை அகற்றுவதற்கு
ரயில்வே துறை சார்பில், மின் வாரியத்துக்கு உரிய தொகையும்
செலுத்தப்பட்டுள்ளது.ஆனால், மின் வாரியத்துறையினர் முரண்டு பிடித்ததால்,
பாலம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது.அங்கு பணியாற்றும்
தொழிலாளர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பணியாற்றும் நிலை
இருந்தது.மேம்பாலப்பணியை தடையின்றி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட இடத்தில்
இருக்கும் உயர்மின் அழுத்த கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
கடந்த 1ம் தேதி 'காலைக்கதிர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.அதன்
எதிரொலியாக, மின் வாரியத்துறையின் மேம்பாலம் அமையும் இடத்தில் இருந்து
மின்கம்பிகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.


