Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நல்ல திட்டங்கள் நிச்சயம்

நல்ல திட்டங்கள் நிச்சயம்

நல்ல திட்டங்கள் நிச்சயம்

நல்ல திட்டங்கள் நிச்சயம்

ADDED : அக் 07, 2011 12:01 AM


Google News
திண்டுக்கல் : ''நல்ல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவேன், '' என, திண்டுக்கல் நகராட்சி 30 வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் கே.செல்வம் கூறினார்.திண்டுக்கல் கக்கன்நகர், இந்திரா நகர், திருமலைசாமிபுரத்தில் அவர் பேசியது:நகராட்சியில் ஊழலற்ற நிர்வாகம் நடக்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதராஜூக்கும், எனக்கும் வாய்ப்பு அளியுங்கள்.

30வது வார்டில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். தரமான ரோடுகள், சாக்கடை வசதிகள் செய்து தரப்படும். போடிநாயக்கன்பட்டி, அழக்கப்பா சந்து, மிக்சர்கடை சந்து, மீனாபேங்கர் சந்துக்களில் உள்ள ரோடுகள் சீரமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தால் சிதைந்த ரோடுகள், மறு சீரமைப்பு செய்யப்படும். அழகப்பா பைனான்ஸ் சந்தில் பிளாஸ்டிக் தொட்டி வைத்தும், தார்ரோடு அமைத்தும், தெருவிளக்குள் எரிவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். கக்கன் நகரில் சாக்கடை கால்வாய் புதிதாக அமைத்து தரப்படும். கக்கன்நகரில் கருமக்கிரியை செய்யும் தோப்பில் சிமென்ட் தளமும், மின்விளக்கும் அமைத்து தரப்படும். தெருக்களில் சே ரும் குப்பைகளை அள்ள, தினந்தோறும் குப்பை வண்டிகள் வருவதற்கு ஏற்பாடு செய்வோம். சுத்தமான வார்டாக மாற்ற தினமும் பாடுபடுவோம். ரேஷன் கடையில் தரமான பொருட்கள், சரியான எடையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். முதல்வர் ஜெ., அறிவித்துள்ள இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வார்டில் குறைகேட்கும் அலுவலகம் அமைத்து, மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும். வார்டில் உள்ள இளைஞர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். மக்களின் பிரச்னைகளை களைவதற்கு தினமும் தெருக்களை சுற்றி வருவேன். மழைநீர் செல்ல வழியில்லாமல் திருமலைசாமிபுரம், போடிநாயக்கன்பட்டி மக்கள் அவதிப்படுகின்றனர். இதை நிவர்த்தி செய்ய புதிய வடிகால்கள் அமைக்கப்படும். பொதுமக்கள் எந்தநேரமும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us