/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தி.மு.க.,கவுன்சிலருக்கு கோர்ட்டில் அபராதம்தி.மு.க.,கவுன்சிலருக்கு கோர்ட்டில் அபராதம்
தி.மு.க.,கவுன்சிலருக்கு கோர்ட்டில் அபராதம்
தி.மு.க.,கவுன்சிலருக்கு கோர்ட்டில் அபராதம்
தி.மு.க.,கவுன்சிலருக்கு கோர்ட்டில் அபராதம்
ADDED : ஆக 06, 2011 02:17 AM
கடலூர் : மருந்து கடை உரிமையாளரைத் தாக்கிய தி.மு.க., கவுன்சிலருக்கு கடலூர் கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டது.நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரவணன், 36; மெடிக்கல் கடை வைத்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35; 10வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.முன் விரோதம் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி ராஜ்குமார் தனது மொபைல் போனில் சரவணனை தொடர்பு கொண்டு, தி.மு.க., அலுவலகம் அருகே வருமாறு அழைத்தார். அங்கு வந்த சரவணனை, ராஜ்குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்குமாரை கைது செய்து, கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதா, வழக்கில் தொடர்புடைய ராஜ்குமாருக்கு 850 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.