/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரத்தில் போதை போலீசார் அதிகரிப்பு யோகா பயிற்சிக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகம்ராமநாதபுரத்தில் போதை போலீசார் அதிகரிப்பு யோகா பயிற்சிக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகம்
ராமநாதபுரத்தில் போதை போலீசார் அதிகரிப்பு யோகா பயிற்சிக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகம்
ராமநாதபுரத்தில் போதை போலீசார் அதிகரிப்பு யோகா பயிற்சிக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகம்
ராமநாதபுரத்தில் போதை போலீசார் அதிகரிப்பு யோகா பயிற்சிக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகம்
ADDED : அக் 07, 2011 10:59 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசாரின் குறைகள் நிவர்த்தி செய்யப்படாததால், மதுபழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இவர்களுக்காக நடத்தப்படும் யோகா பயிற்சிக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரத்தில் எஸ்.பி., கையொப்பம் இல்லாததால், இரண்டு மாதமாகியும் பயணப்படி உள்ளிட்ட நிலுவைத்தொகை கிடைக்காமல் போலீசார் தவிக்கின்றனர். இந்த பணத்தை நம்பி, கைமாற்றாக வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் பலர் தவிக்கின்றனர்.இதனால், மனரீதியாக பாதித்த சிலர், மேலும் கடன் வாங்கி டாஸ்மாக் கடைகளை நாடுவது அதிகரித்து வருகிறது. மதுவுக்கு அடிமையான போலீசாருக்காக ஆயுதப்படை பிரிவில் யோகா வகுப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக யோகா வகுப்பில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன்பு யோகா பயிற்சிக்கு ஐந்துக்கும் குறைவான போலீசாரே வந்தனர். கடந்த சில மாதங்களாக 30க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். மக்கள் பிரச்னையை எளிதில் தீர்த்தாலும், சொந்த பிரச்னை என்று வரும்போது போலீசார் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதை தீர்க்க, நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.


