/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பனப்பாளையம் புதூரில் கால்நடை பாதுகாப்பு முகாம்பனப்பாளையம் புதூரில் கால்நடை பாதுகாப்பு முகாம்
பனப்பாளையம் புதூரில் கால்நடை பாதுகாப்பு முகாம்
பனப்பாளையம் புதூரில் கால்நடை பாதுகாப்பு முகாம்
பனப்பாளையம் புதூரில் கால்நடை பாதுகாப்பு முகாம்
ADDED : ஆக 09, 2011 02:49 AM
காரமடை : காரமடையை அடுத்த கெம்மாரம்பாளையம் ஊராட்சி பனப்பாளையம் புதூரில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 'கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்' நடந்தது.
ஊராட்சி தலைவர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ் முகாமை துவக்கி வைத்தார். அவினாசி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் வரதராஜன், மாவட்ட கவுன்சிலர் சரோஜா, பொன்னுசாமி உள்பட பலர் பேசினர். கால்நடை டாக்டர்கள் காசிவிஸ்வநாதன், தியாகராஜன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். குடற்புழு நீக்கம் 948 கால்நடைகளுக்கும், 96க்கு சிகிச்சை, 37க்கு ஆண்மை நீக்கம், 30க்கு கருவூட்டல், 48 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, 17க்கு மலட்டுத்தன்மை நீக்கம், 11க்கு அறுவை சிகிச்சை என மொத்தம் 1187 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. வெள்ளிங்காடு ஊராட்சி தலைவர் ஜீவானந்தம், கால்நடை ஆய்வாளர் தங்கராஜ், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர். தாயனூர் கால்நடை டாக்டர் காசிவிஸ்வநாதன் வரவேற்றார். தேக்கம்பட்டி கால்நடை ஆய்வாளர் நஞ்சுண்டன் நன்றி கூறினார்.


