/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரிய வகை பபாப் மர வளர்ச்சி: வனத்துறை அதிகாரிகள் அளவீடுஅரிய வகை பபாப் மர வளர்ச்சி: வனத்துறை அதிகாரிகள் அளவீடு
அரிய வகை பபாப் மர வளர்ச்சி: வனத்துறை அதிகாரிகள் அளவீடு
அரிய வகை பபாப் மர வளர்ச்சி: வனத்துறை அதிகாரிகள் அளவீடு
அரிய வகை பபாப் மர வளர்ச்சி: வனத்துறை அதிகாரிகள் அளவீடு
புதுச்சேரி : சுதேசி மில் வளாகத்தில் உள்ள அரிய வகை மரமான பபாப் மரத்தின் வளர்ச்சி குறித்து, வனத்துறை ஊழியர்கள் நேற்று அளவீடு செய்தனர்.புதுச்சேரி சுதேசி மில்லுக்குச் சொந்தமான பல ஏக்கர் இடம் பயன்படுத்தப்படாமல், அடர்ந்த காட்டுப் பகுதியாக உள்ளது.
வேளாண் அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:வெப்ப மண்டலக் காடுகளில் காணப்படும் பபாப் மரம், புதுச்சேரியில் அரிதாகவே காணப்படுகிறது. தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, மதகடிப்பட்டு, முத்தியால்பேட்டை ஆகிய இடங்களில் இந்த மரங்கள் உள்ளன. இம் மரம் 100 முதல் 120 ஆண்டுகள் வரை வறட்சி, வெப்பம் ஆகியவற்றைத் தாங்கி வளரக் கூடியது. மரத்தினால் நேரடிப் பயன் எதுவுமில்லை. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது. சுதேசி மில் வளாகத்தில் உள்ள 2 பபாப் மரங்கள், பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் இருந்து வளர்ந்து வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேல் வயதுள்ளவை. ஆண்டுதோறும் இம் மரங்களின் வளர்ச்சியைக் கண்காணித்து வருகிறோம். தற்போது அளவீடு செய்ததில், ஒரு மரத்தின் அடிப்பகுதி 10 மீட்டரும், மற்றொரு மரத்தின் அடிப்பகுதி 8 மீட்டரும் சுற்றளவு கொண்டதாக உள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும், தலா ஒரு மீட்டர் சுற்றளவு வளர்ச்சி அடைந்துள்ளன.இவ்வாறு சிவக்குமார் கூறினார்.


