/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சித்தர் பீடத்தில் குரு பூஜை: முதல்வர் ரங்கசாமி பங்கேற்புசித்தர் பீடத்தில் குரு பூஜை: முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
சித்தர் பீடத்தில் குரு பூஜை: முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
சித்தர் பீடத்தில் குரு பூஜை: முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
சித்தர் பீடத்தில் குரு பூஜை: முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
ADDED : ஆக 09, 2011 02:52 AM
புதுச்சேரி : காராமணிக்குப்பம் சக்திவேல் பரமானந்த சுவாமிகள் சித்தர் பீடத்தில் நடந்த குரு பூஜை விழாவில் முதல்வர் ரங்கசாமி அப்பா பைத்திய சாமி சிலையை திறந்து வைத்தார்.சக்திவேல் பரமானந்த சுவாமிகள் சித்தர் பீடத்தில் மகா குரு பூஜை நேற்று காலை 4.30 மணிக்கு வேள்வியுடன் துவங்கியது.
6 மணிக்கு இடபக் கொடி ஏற்றுதல், 7 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பராயணம், 9 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 12 மணிக்கு கலச பூஜை, திருக்குட முழுக்கு அலங்கார ஆராதனை நடந்தது. முதல்வர் ரங்கசாமி கோவிலில் புதியதாக அமைக்கப்பட்ட அப்பா பைத்திய சாமி மற்றும் அழுக்கு சாமி சிலைகளை திறந்து வைத்தார். விழாவில் போக்குவரத்து எஸ்.பி., பழனிவேல் கோவில் நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, வைரக்கண்ணு, மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


