காதலன் வீட்டின் முன் உண்ணாவிரதம் : முற்றுகையிட்டு முழு வெற்றி
காதலன் வீட்டின் முன் உண்ணாவிரதம் : முற்றுகையிட்டு முழு வெற்றி
காதலன் வீட்டின் முன் உண்ணாவிரதம் : முற்றுகையிட்டு முழு வெற்றி
பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே திருமணத்திற்கு மறுத்த காதலன் வீட்டின் முன், உண்ணாவிரதம் இருந்து திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 13ம் தேதி, சந்துரு திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பலாத் தோப்பில் இருந்த தமிழரசியை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் மறுநாள் அவரது வீட்டிலேயே கொண்டு வந்து விட்டுச் சென்றார். இத்தகவல், தியாகவல்லியில் உள்ள கிராம மக்களுக்கு தெரிந்ததும் சந்துருவிடம், தமிழரசியை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினர். சந்துருவின் பெற்றோர் மறுத்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தமிழரசி, தனது தாய் மணிமேகலையுடன் நேற்று திருச்சோபுரம் சென்று, காதலன் சந்துரு வீட்டின் முன், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த 100க்கும் மேற்பட்டோர், தமிழரசிக்கு ஆதரவாக சந்துருவின் வீட்டின் முன் குவிந்தனர். அதைத் தொடர்ந்து, கிராம முக்கியஸ்தர்கள் இரு குடும்பத்தாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். தகவலறிந்த புதுச்சத்திரம் மற்றும் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சு வார்த்தைக்குப் பின்னர் சந்துரு, தமிழரசியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதையடுத்து, மாலை 6 மணிக்கு, திருச்சோபுரநாதர் சிவன் கோவிலில் இருவருக்கும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, கரம் பிடித்த காதலனுடன் தமிழரசி தனது வீட்டிற்குச் சென்றார்.