/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/முதல்வர் பசுமை புரட்சித் திட்டத்தின் கீழ் பயனடைய வேளாண் இயக்குனர் அழைப்புமுதல்வர் பசுமை புரட்சித் திட்டத்தின் கீழ் பயனடைய வேளாண் இயக்குனர் அழைப்பு
முதல்வர் பசுமை புரட்சித் திட்டத்தின் கீழ் பயனடைய வேளாண் இயக்குனர் அழைப்பு
முதல்வர் பசுமை புரட்சித் திட்டத்தின் கீழ் பயனடைய வேளாண் இயக்குனர் அழைப்பு
முதல்வர் பசுமை புரட்சித் திட்டத்தின் கீழ் பயனடைய வேளாண் இயக்குனர் அழைப்பு
ADDED : ஜூலை 25, 2011 02:01 AM
திருத்துறைப்பூண்டி: ''தமிழக முதல்வர் பசுமை புரட்சித் திட்டத்தின் கீழ் அனைத்து சிறு, குறு விவசாயிகளையும் நவீன தொழில்நுட்பத்தில் பங்கு பெறச் செய்து உணவு உற்பத்தியை பெருக்கி, தனியொரு சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி, இருமடங்காக உயர்த்த வேண்டுமென அரசு திட்டமிட்டுள்ளது,'' என உதவி வேளாண் இயக்குனர் நடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகளும் இத்திட்டத்தில் பங்கு பெறச் செய்து மூன்று ஆண்டுகளில் வேளாண் துறையால் வழங்கப்படும், அனைத்து நலத்திட்டங்களையும் கிடைக்கச் செய்து, நவீன தொழில்நுட்பங்களையும் கடைபிடிக்க எல்லா வகையான உதவிகளையும் கிடைக்கச் செய்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில், அனைத்து கிராமங்களிலும் உள்ள சிறு, குறு விவசாயிகளின் விவரமும், உணவு உற்பத்தியை பெருக்க தேவையான இடுபொருள்கள் விபரங்களையும், சம்பந்தப்பட்ட வேளாண் உதவி அலுவலர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முழுப்பலனையும் பெற்று, பலனடைய இவ்வட்டார சிறு, குறு விவசாயிகள் அனைவரும் நிலவளம் அறிந்து அதன்படி உரமிட ஏதுவாக மண் மாதிரி சேகரித்து, மாதிரி ஒன்றுக்கு 35 ரூபாய், விவசாயிகள் கலர் புகைப்படம் (ஃபோட்டோ) ஒன்றையும் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் கேட்கும் விவரங்களையும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழக முதல்வர் பசுமை புரட்சித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டு இவ்வட்டாரத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதி சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் வேளாண் துறையால் வழங்கப்படும், அனைத்து இடுபொருள்களும் மானிய விலையில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.