Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் "பிசி' : கூலி வேலைக்கு ஆட்கள் "டிமாண்டு'

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் "பிசி' : கூலி வேலைக்கு ஆட்கள் "டிமாண்டு'

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் "பிசி' : கூலி வேலைக்கு ஆட்கள் "டிமாண்டு'

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் "பிசி' : கூலி வேலைக்கு ஆட்கள் "டிமாண்டு'

ADDED : அக் 11, 2011 02:21 AM


Google News

பொன்னேரி : உள்ளாட்சித் தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு ஆட்கள் சென்று விடுவதால் கட்டுமான மற்றும் விவசாய பணிகளுக்கு, கூலி ஆட்கள் கிடைப் பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம் ஆகியவற்றில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு, ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரும் தன் ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடும்போது, தன் பலத்தை நிரூபிக்க ஏராளமான ஆதரவாளர்களை திரட்டி ஊர்வலமாக செல்கின்றனர். ஒவ்வொரு வேட்பாளர்களுடனும் செல்பவர்கள் தங்கள் அன்றாட பணிகளை விட்டுவிட்டு, கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு காலை, மதியம் 'தடபுடல்' உணவு, மாலையில் வீடு திரும்பும்போது கை நிறைய பணம், இலவச இணைப்பாக மதுவகைகள் என, வேட்பாளர்களுடன் செல்பவர்களுக்கு சகல மரியாதை செய்யப்படுகிறது.



பெரும்பாலும் வேட்பாளர்களுடன் செல்பவர்கள் கட்டுமானம் மற்றும் விவசாயப் பணிகள் உள்ளிட்ட அன்றாட பணிகளில் ஈடுபடுபவர்களே. இவர்கள் தேர்தல் பிரசார பணிகளுக்கு சென்று விடுவதால், கட்டுமானம் மற்றும் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பா பருவத்திற்காக, நடவுப் பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் ஆட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு

வரும் 'பில்டர்'கள் பத்து நாட்களாக, தினக்கூலி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து போனதால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். தேர்தல் முடியும் வரை இந்நிலை நீடிக்கும் என தெரிகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us