Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தி.மு.க.,வினர் தேர்தல் பணியில் சுணக்கம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலக்கம்

தி.மு.க.,வினர் தேர்தல் பணியில் சுணக்கம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலக்கம்

தி.மு.க.,வினர் தேர்தல் பணியில் சுணக்கம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலக்கம்

தி.மு.க.,வினர் தேர்தல் பணியில் சுணக்கம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலக்கம்

ADDED : அக் 08, 2011 01:26 AM


Google News
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி தி.மு.க., சேர்மன், கவுன்சிலர் வேட்பாளர்களின் பிரச்சாரம் மந்தமான நிலையில் இருப்பது, அக்கட்சியினரை கவலையடையச் செய்துள்ளது.

திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் பதவிக்கு, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், பா.ஜ., வி.சி., செங்குந்தர் இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஒன்பது வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். அதில், நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் நடசேன், மூன்று முறை நகராட்சி சேர்மனாக இருந்தவர். அதனால், மக்கள் மத்தியில் அவர் நன்கு அறிமுகமானவர். இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் சேர்மன் நடேசனை போலீஸார் இருமுறை கைது செயதனர். அவர், தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். எனினும், அவர் தேர்தல் அறிவித்த பின்னரும் பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், சேர்மன் வேட்பாளர் இல்லாமல், தி.மு.க.,வில் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மந்தமடைந்தது. இதுவரை தேர்தல் பணிக்குழுவும் தி.மு.க.,வில் அமைக்கப்படவில்லை. கட்சியின் மாவட்ட செயலாளர் காந்திச்செல்வன், எம்.பி., செல்வகணபதி ஆகியோர் தேர்தல் பணியை முன்நின்று செயல்படுத்துவர் என கட்சியினர் கருதினர். ஆனால், எம்.பி., செல்வகணபதி, திருச்சி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் காந்திச்செல்வன் இணையமைச்சராக இருப்பதால், மற்ற பணிகளில் அவரால் கவனம் செலுத்த இயலவில்லை. அதே நேரத்தில், அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சியினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுவது, நகர தி.மு.க.,வினரை கவலையடையச் செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us